The Word (the mantra)

That sweet was in my hand.
Overwhelmed by the nature of it
i could not eat but to observe.
Observe with ones sharpest mind
what is all about?
where does it begin?
how do I get it?
My mother who gave me this,
reminded me
that I should eat to enjoy it.
yes, of course language is to
learn and enjoy,
like my predecessors
Kamban, Barathi but..wait
Dakshinamurthi never uttered a word but
for Sadagopan and Tirumazichai
the word was ambrosia, the divine!
Mummy reminded me again
Eat my darling!
Yes, Mom..but
where does it all start?
from the Silence of Siva?
from the utternce of Vishnu?
Before everything
the word was there!
Looking at the eyes of my mother,
I gulped it.
The word!
Magically, it came out of me
as poems,
as art of skillful human drama
without being spoilled
in its original state of purity
with all its grace that
even I could handle it
with ease.

கடல்வெளி

கையில் வைத்த இனிப்பை
கண்கொட்டாமல் பார்த்திருந்தேன்.
சாப்பிடாம, என்ன பார்வை? என்றாள் அன்னை.
நீ தந்த இனிப்பு இது
இனிப்பு இனிக்கும் என்றாலும்
நீ தந்து, தேன் கலந்து தித்திக்குமென்றேன்.
பேசாம, சாப்பிடு…உடலுக்கு நல்லது என்றாய் தாய்.
தாய், என் அன்னை!
தாய் தந்தது.
தாய் தந்த மொழி.
தாய் மொழி.
இதை இப்படிப் பாவிக்கும் போதே
உள்ளுள் ஒரு பதற்றம்.
பவித்திரம் கெட்டு விடுமோவென்று.
குறுமுனி கொண்ட மொழி
கம்பன் வாய்மொழி
பாரதியில் மந்திரமொழி
கற்ற மொழியாகக் கலந்து நிற்கும்
மோனமுனி தன் மொழி.
‘என்னடா! இன்னும் பாத்துக்கிட்டு’? இது அன்னை!
உன்னும் சோறு, பருகு நீர், தின்னும் பண்டம்
எல்லாவற்றிலும் உள்ளொளிந்து நிற்கும்
இம்மொழி பரவெளி கண்டு பிண்டத்துள் புகுந்ததோ?
‘இப்ப சாப்பிடப் போறயா? இல்லையா’
எண்ணும் எண்ணத்தின் உள்நிற்கும் சக்தியாக
இம்மொழி உள்ளே போகிறது.
‘இதோ! விழுங்கிவிட்டேன்!’
சிந்திய வார்த்தைகள்
கொட்டிக் கிடக்கின்றன
கடல்வெளி
மணற்பரப்பாய்.
பவித்திரம் கெட்டாலும்
பாவிக்கும் குணநிறைவாய்

ஒரு பதில் “The Word (the mantra)” க்கு;

  1. kamaladevi சொல்வதென்னவென்றால்:

    அற்புதம்
    கமலம்

மறுமொழி இடுக