Are we alone?
Is it love at first sight?
Can’t be.
You said you were with me
all the time, but
I never saw you.
Look at your look now!
Like a charioteer,
frightening mustache
dusty cloths, yet
you dared to step into
my home while I was all alone.
only the distant bark of a dog
was the witness.
I gave you water, as you wished
but you touched my bangles.
It was not all,
you told me that I belong to you!
but..wait I was always alone.
Yes, you said,
the loneliness is a result
of belonging!
Your unknown sight on me,
our common belongings
our common desires
made me lonely.
Quite intriging!
do I feel then
your loneliness?
Yes, you said!
do I exist without you?
or could you exist
without me?
Tell me the black one?
காதற்பெரு நோய்
கண்டவுடன் கொண்ட காதல் இல்லை
இது ஏற்பாடு செய்த காதல்
உன்னைக் கண்டவுடன் ஒன்றுமே
தோன்றாவண்ணம் எத்தனை விகல்பங்கள்
உன் தோற்றம் நீ தேரோட்டி என்றது
மீசை, கிருதா, முகமெல்லாம் வெட்டு
குடியிருப்பு தாண்டாத எனக்கோ
உன்னைக் கண்டவுடன் பயம்,
கருவாக்கட்டை என்று தூரத்துக்குரலொன்று
உண்ணநீர் வேண்டுமென்று உள்ளே வந்தாய்
தூரத்து நாய் குரைப்புதான் சாட்சி
சொம்பு நீருடன் கைவளை தொட்டாய்
வெல, வெலத்த உடம்பிற்கு ஆறுதல் தந்தாய்
அன்பொன்று உள்ளுண்டு என்று
அமைதியாய்ச் சொன்னாய்
மாலை மயங்கும் வேளையில்
மனதைக் கொண்ட நீ
மயக்க நிலையில் உரைத்ததை
மன்றாடிய தோழிக்குச் சொன்னால் புரியவில்லை.
இற்றைக்கு வந்த உறவல்ல இது
ஏழேழ் பிறவிக்கும் துணையாய் வரும்
உறவென்று சொல்லப் போய்
உற்ற தோழியும் நகை விட்டு
சென்றுவிட்டாள்.
தன்னந்தனியாய் நானிருந்த வேளையில்
மீண்டும் நீ வர காத்திருந்த போதுதான்
விளங்கியது, நீ வருவதும், போவதும்
துணை கொண்டு மகிழ்விப்பதும்
தூர விலகிப்போவதுமென்று
விழித்துப் பார்க்கையில் கோடி
ஜென்மம் இடையில் போனது!
இப்போதாவது புரிந்ததே
மயக்கமும், மகிழ்விப்பும்
மன உளைச்சலும் என் மீது
நீ கொண்ட தீராத பார்வை நோய் என்று.
நான் தனி அல்ல
நீ உண்டு, இல்லை
நீயுண்டு அதனால் நானுண்டு
என்று.