Wood Apple

I was not really in the mood
to make love!
it was Sivarathri,
the day of purification
the day of penance!
but he insisted.
In the deep slumber
after that,
I had a dream.
A yogi
who has burnt all his
desires,
a naked one
with no possession
entered me.
I knew I conceived you.
You are certainly not
a normal child.
Others say you are
handicapped.
Metally retarded.
I don’t think so.
I never regret a moment
after that.
Its not our sin but
your wish.
Being with you burns my ego
keep my attention focused
and turns me a diamond.
Only I knew I was just a
piece of charcoal before.
Thank you my child.

விளாம்பழம்

உன்னைக்கருவுற்ற போது
ஒரு காட்சி கண்டேன்
புற உலகின் மாயை நீக்கி
அக உலகின் அசுத்தம் நீக்கி
வெண் சாம்பல் மேனியனாய்
வந்து பிட்சை கேட்கும் சாதுவாய்
நீ உட்புகுவது போல்
நீ பிறந்தபின்
உலகம் உன்னை அதிசயக்
குழந்தை என்று காணவில்லை.
அவர் உலகில் நீ ஒட்டவில்லை.
அது உன் தவறில்லை
எங்கள் தவறென்றும் சொல்வதற்கில்லை
எம் இச்சையால் நீ பிறக்கவில்லை
உன் இச்சையால் வந்து பிறந்தாய்
கரியாய் கிடந்த நான் இன்று
வைரமாய் மின்னுகிறேன்
நீ ஒரு யோகி என்று
நான் சொல்கிறேன்
உன்னைப் பெற்று வளர்ப்பதால்
நானே யோகி என்று
தோழி சொல்லுகிறாள்.
நீ வாழி.

2 பதில்கள் “Wood Apple” க்கு;

  1. இரத்தினவேலு சொல்வதென்னவென்றால்:

    நல்ல கவிதை

  2. chithan சொல்வதென்னவென்றால்:

    வணக்கம்
    எல்லாக் கவிதைகளையும் வாசித்தேன். வாழ்த்துகள் சித்தன் – யுகமாயினி yugamayini.blogspot.com

மறுமொழி இடுக