கவிதை

ஜனவரி 23, 2009

ஓடியும் வந்தும்
ஒட்டி உறவாடியும்
வாடிய போதில்
வழித்துணையாகியும்
கூடி மகிழ்ந்து
கும்மாளமிடும் போதும்
பாடிக்களித்து பறை
கொட்டி நின்ற போதும்
நாடி வந்து நல்லது
செய்வது நமக்குள்
களித்துறங்கும்
கவிதை!

Poem

May I call it a friend?
like a friend in need.
May be it is a travel mate?
sharing my journey of life!
A party mate?
sharing my joy and celebration.
A pet, may be?
like a dog that curls around my feet!
its hard to describe,
the one that sleeps in my heart
to be awakened to be named.
yes, my poem!


கிரியா ஊக்கி

ஜனவரி 22, 2009

வார்த்தைகள்
உலகெங்கும்
உடலெங்கும்
சிதறிக்கிடக்கின்றன.
வேதிமச் சேர்க்கையாய்
கூட்டிக் கழித்து
புதியவொன்றாக்க
கிரியா ஊக்கிகள்
வேண்டியபோது
கிடைக்காமல்
வார்த்தைகள்
சிதறிக்கிடக்கின்றன
இம்மண்டலமெங்கும்!

Catalist

Words words everywhere
all over me
all over you
all over the cosmos.
Awaiting still for
the catalist
the alchemy
that will churn them
2
a
POEM


அழைப்பு

செப்டம்பர் 9, 2008

நீ எப்போது அழைப்பாய் என்று காத்திருப்போர் சிலர்
ஐயோ! அழைக்காதே! என்று கதறுவோர் சிலர்
அது என்னவென்றே புரியாத சிலர்
உன்னை காலால் மிதிப்பேன் என சூளுரைப்போர் சிலர்
உன்னை வென்று நிலைத்துவிட்டாதாய் சிலர்
எல்லோருக்கும் போக்குக்காட்டி
ஒரு நாள் நீ அழைக்கிறாய்
உன் அழைப்பை அவமதிக்கும் திடமோ
அன்போடு ஏற்கும் பக்குவமோ
ஐயா! விடு என்னை! என்று உதறிப் போகும் இடமோ
ஒன்றும் தெரியாமல்
உன் கை பிடித்துப்போகும்
குழந்தை போல் நாங்கள்.

வாழி நீ!

Invitation

Out there! in desperation! waiting for your call,
No! don’t ever call me, I’ve so much to finish
say some,
Damn it! what the hell is it?
people without a clue
Can you dare come close to me?
I will kick your buts! say some,
Transform your body etheral and
live for ever eternally!
declared a few!
But you!
the biggest cheater!
you managed to cheat everybody
and invite.
When your invitation arrives,
we can’t ignore it,
we can’t accept it with love,
we can’t run away from it,
we..well don’t know how to
handle it,
we walk with you
side by side
holding your hands
like a dependent child!

long live
death.


மீண்டும் பாட்டியாகுதல்

ஆகஸ்ட் 28, 2008

அது
கருவறைக்குள்
கிச்சுக்கிச்சு மூட்டியது!

மீண்டும்
நான்
பாட்டியாகியிருக்கிறேன்
எனும் தாதியின் சொல்

To be a grandma again

It tickled me
at the bottom of my
womb
when I heard
that I became
a grandma
again


Samsara (The Web)

ஆகஸ்ட் 28, 2008

There was a net between heaven and earth
so it appeared to me
as I can’t see the beginning or the end
so transparent like a glass
the art of placing a net!
but the spider was
in the center
sitting or standing?
it moved along the net
for the music of the wind
or it swang itself,
somebody came to join the fun
but got entangled.
nets are important
so said the spider
it should be transparent
it should be attractive
it should be strong
but
said the spider
with a pause.
be in the center
be the builder
be the material
be the artist with skill
but
said the spider
…..
never get entangled
…..

the net started vibrating
as if feeling the vibs of life.

வலையொரு கலை

விண்ணிற்கும் மண்ணிற்கும்
வலை கட்டியிருந்தது
அல்லது
அப்படித் தோன்றியது.
கண்ணாடி போன்ற
கயிற்றுப் பின்னல்
கண்ணிற்குத் தெரியாததால்!
நடுவில் இருந்தது சிலந்தி
காற்றின் அசைவா
அல்லது
ஊஞ்சல் போல் தன்னையே
ஆட்டிக் கொள்கிறதா?
கேட்க வந்த பூச்சி
பிசு, பிசு என ஏதோ பின்ன
கேள்வி கேட்குமுன்
மரித்துப் போனது.
பார்த்துக் கொண்டிருந்த என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தது சிலந்தி
அல்லது
அப்படித் தோன்றியது.
வாழ்வில் வலைகள் அவசியம்
வலைகள் தொடர்புப் பின்னல்கள்
இணைப்புப் பாலங்கள்.
ஆனால்
அன்று நின்ற சிலந்தி போல்
வலை கட்டி
வலை மறைத்து
வந்து போகும் விருந்தினரை
பாசப் பசையில் மாய்த்து
காற்றினும் மெல்லிய
வலிய வலையில்
தான் விழுந்து மாயாமல்
பாசப் பசையில் ஒட்டித் திணறாமல்
கட்டிய வலையில்
நட்ட நடுவே
நின்று
ஆடத் தெரிந்திருக்க வேண்டும்,
அது கலை.


கருங்குழி

பெப்ரவரி 17, 2008

வார்த்தைகள்
உள்ளன என்பதற்காய்,
காலிப் பக்கங்கள்
இருக்கின்றன என்பதற்காய்,
மொழியறிவும் உண்டென
என்பதற்காய்,
எண்ணமென்பதறியாது
கோழி கிளறிய நிலமாய்
சொற்களை வீசிவிட்டு
பின் அதற்குள்
கவிதையைத்
தேடுவதை விட
எண்ணத்தின் அடர்த்தியில்
வார்த்தையின் கனத்தில்
கணங்கள் அமிழ்ந்து கரைய
கருத்து
கனிந்து
கரும்புள்ளியாய்
நிற்கவே
விரும்புகிறது
கவிதை

Black hole

the intensity is
enormous
there is no time
to waste
no words to
mince
no effort to
make
there
stands
my
portry


கணிகை / Hooker

ஜனவரி 26, 2008

அந்த அவசரமான தெரு
அமைதியுற்ற போது அவளைக் கண்டேன்.
மலர்ந்தும் மலராத காலைப் பொழுதின்
இருள் சூழ்ந்த பொழுது போன்ற இரவுச் சூழல்.
கண்ணொடு கண் பார்க்கத் தயங்கினாள்,
பேசும் போது கூட அந்தர்வானில் இருக்கும்
அடையாளமற்ற மனிதனுக்கு
பதிலுரைத்தாள்.
நீ முன் போ! நான் தொடர்கிறேன் என்றாள்.
தொடர்ந்தாள் ஓரிரவு.
பின்னாலும் சில இரவு.
உன் தொழில் என்னவென்று கேட்கவில்லை
என் தொழில் கவிதை
என்றபோது சிரித்தாள்.
பொய்யில் மலரும் பூங்காவனத்துக்கரசே
இன்று போய் நாளை வந்தால்
உம் சரிதத்தில் நானும் பொய்தானே?
என்றாள்.

பொய்யின் கணங்களில்தான் உண்மை
ஸ்தாபிக்கப்படுகிறது பெண்ணே!
என்ற போது அணைத்து நொறுக்கினாள்.
இது பொய்யென்றால்தான் விடுவேன் என்றாள்.

உன்னை வைத்துக் காவியம் படைக்கப்போகிறேன்
ஆனால் அதற்கான காலமோ கைவசமில்லை.
சிறு இடை வளையும் சுழிவிற்கேனும் ஓர்
சிறுகதை செய்வேன் என்றேன்.
பத்திரிக்கை போடாது என் இரவை என்றாள்.
கணத்துக் கனிந்த இரவுப் போர்வையாய்
இரு என்று சொல்வதற்குள்
காலக்கணக்கு முடிந்தது என்றாள்.

நில், நில்
என் கவிதை
அது உன்னுள்
கருவுற்றுவிட்டது.
பிரசவித்துப் போகலாமென
அவள் மார்ப்பில் எழுதிய
கவிதை மிஞ்சிய போது
சிரித்தபடியே
கருவுறுதல் இங்கு
அனுமதியில்லை
கவனம் கவிஞரே
என்றாள்.
பின்
இல்லாள்.

கவிதைப் பொழுதுகளை
கையில் அள்ள முடியாதது போல்
கணிகையர் காலத்தையும்
கையில் கொள்ளமுடியாதென
உணர்ந்தேன்.

ஆயினும்,
எல்லாக் கணிகையரும்
நல்ல மனைவி ஆகலாம்
இவளை நோக்கின்.

ஆனால் காலம்
கணிப்பதில்
தவறிவிடுகிறது.

என்னுடைய சரிதத்தில்
இவளொரு கனவே!
இவளது கனவில்
என் சரிதம் வெறும்
நிகழ்வே.

நிகழ்வெனினும்
கணவெனினும்
கணக்குப் பார்த்து
கட்டுப்பட்டிருப்பது
நம் இயல்பே!

Hooker

When the shops were closed and
bright lights gone
I saw her like a flower at dusk.
I bargained
she didn’t see me
eye to eye
neither
she spoke to me
directly.

she asked me
to lead her
to my room
that nobody notices us.

So what’s your job?
asked she
cuddling in my arms.

well..you see
I’m a poet.

What?

forget it.

Shall we meet again?
I asked her when she left me.
Sure, why not?

So we met a few times.
and when I saw her last,
I told her that I might
write a novel about her,
but I don’t have time.
May be a short story.
Nobody will publish it
said she.

A poem!

wait..don’t go away,
let me finish it
while you are still
in my warmth.
this poem is your child
said I.
impossible
said she.
we’re not allowed
pregnancy.

Good bye Poet.

She vanished in
thin air.

I’m back to my
world with her thoughts.
She could be a fine wife indeed.
but you see
I can’t be the husband.
that’s my
problem.

Pledge to make women’s rights a special priority TODAY!


கருவறையுள் அது

ஜனவரி 25, 2008

உள்ளேயேதான் உள்ளது என்றனர்
உணர்வின் கருவாய் ஒளிர்வது என்றனர்
அமைதியாய் தேடு அகப்படும் என்றனர்
அங்கு இங்கு எனாதபடி அடைப்புகளற்ற
என் சிந்தனை ஓட்டத்தின் உராய்வில்
கருவறை எங்கெனத் தெரியவில்லை
அங்குதான் உள்ளது
அங்குதான் உள்ளது
என்று சொல்லும் குரல் மீண்டும்
எங்கெல்லாம் தேடியும்
காணவில்லை
என் கவிதையை

In the deeper space of the womb

It is certain they say that
it should be found inside.

search deeper
again the voice

tune your vibs
be patient
search
you will find it
so say they

it is so noisy
I say
I can’t hear the call

ushhh..
look..look
it is there!

i still search
yes
in search of this
poem


Residual

நவம்பர் 18, 2006

That rain is not over yet
on a winter day with warm drops
falling on the leaves, cones and branches
trees are still
perhaps feeling the warmth
the sun is far and hidden
yet, the drops can form a
diamond jewellery at the
thicket of dark greens
the rain is over, yet
the drops dripping all around
piercing the deepest of the senses
don’t move.
The fire has burnt the body..yet
the warmth is cool enough.
stay alive, besides me
residual time is the best
like the last drop of wine.

எஞ்சும் பொழுதுகள்!

அந்த மழை இன்னும் ஓயவில்லை
பெய்து குளிர்வித்து கொட்டி
முடிந்த பின்னும் கொட்டம் ஒடுங்கவில்லை.
தெள்ளத் தெளியாத வானம்
கண்டும் காணாத கதிரோன்
சிலிர்த்து குளிர் காயா மாமரங்கள்
சொட்டும் இள நீர் நுனி வந்து தங்கி
மின்னும் வைரப் பரப்பு விழியெங்கும் தங்கும்.
எண்ணி மாளாத சிறுஞ்செடிக் கூட்டங்கள்
மலரில், இலையில், கொடியில், கொடிப்பூவில்
சொட்டிச் சொட்டும் மின்மினிப்பூவாய்
நின்று சிரிக்கும் போகாத மாமழை.
எட்டத்தள்ளும் உன் கை விரல் பற்றி
ஒட்ட இழுக்கும் உடலெனும் தீப்பொறி
பற்றி எரிந்து பஞ்சாய்ப போனபின்னும்
மிச்சம் உண்டென எச்சம் சொல்லும்
என்றுமினிய எஞ்சும் பொழுதுகள்


Wood Apple

செப்டம்பர் 27, 2006

I was not really in the mood
to make love!
it was Sivarathri,
the day of purification
the day of penance!
but he insisted.
In the deep slumber
after that,
I had a dream.
A yogi
who has burnt all his
desires,
a naked one
with no possession
entered me.
I knew I conceived you.
You are certainly not
a normal child.
Others say you are
handicapped.
Metally retarded.
I don’t think so.
I never regret a moment
after that.
Its not our sin but
your wish.
Being with you burns my ego
keep my attention focused
and turns me a diamond.
Only I knew I was just a
piece of charcoal before.
Thank you my child.

விளாம்பழம்

உன்னைக்கருவுற்ற போது
ஒரு காட்சி கண்டேன்
புற உலகின் மாயை நீக்கி
அக உலகின் அசுத்தம் நீக்கி
வெண் சாம்பல் மேனியனாய்
வந்து பிட்சை கேட்கும் சாதுவாய்
நீ உட்புகுவது போல்
நீ பிறந்தபின்
உலகம் உன்னை அதிசயக்
குழந்தை என்று காணவில்லை.
அவர் உலகில் நீ ஒட்டவில்லை.
அது உன் தவறில்லை
எங்கள் தவறென்றும் சொல்வதற்கில்லை
எம் இச்சையால் நீ பிறக்கவில்லை
உன் இச்சையால் வந்து பிறந்தாய்
கரியாய் கிடந்த நான் இன்று
வைரமாய் மின்னுகிறேன்
நீ ஒரு யோகி என்று
நான் சொல்கிறேன்
உன்னைப் பெற்று வளர்ப்பதால்
நானே யோகி என்று
தோழி சொல்லுகிறாள்.
நீ வாழி.