சூடிக்கொடுத்தல்! Mirroring!

May 1, 2009

மழலையாக வலம் வந்த போது
பின்னல் சூடி
பூ வைத்து
முகம் பார்ப்பது
பிடிக்கும்.
அப்படியே லக்ஷிமீகரமான முகம்
என்று மற்றோர் போற்றுவதும் பிடிக்கும்.
வளர்ந்து பெரிய பெண்ணான
காலங்களில் கண்ணாடியுடன்
இருந்த போதுகள்
வாழ்வு நிலைபெறும் தருணம்!
அம்மா வந்தாள்
பூச்சூட்டி, உச்சி முகர்ந்து
மணவரையில் உட்காரவைத்து
குலம் தழைக்க மணமுடிந்த பின்
என் பெண்ணிற்கு நான்
தட்டொளி காட்டுகிறேன்
கண்ணாடியில் உம்மாச்சி
காட்டுகிறேன்.
அவள், நான், கண்ணாடி.
கண்ணாடி, அவள், நான்
பின்னாடி
கண்ணாடி, அவள், நான்
முன்னாடி
கண்ணாடி, அவள், நான்,
பின்னாடி,
அவள், நான், கண்ணாடி!

Mirroring

I remember my first
moments in front of
a mirror!
No different from the
fascination of a chimp!
My mother helped me to
identify myself in the
Mirror.
Now I’m grown up
with my own child.
Passing on the secret of
Self identification.
She, me and the mirror
Behind us was another mirror
with perfectly same images.
and in front of us was another
image of us!
Reflected back
to infinity.

Advertisements