ஆக்கத்தின் சுவடு

June 23, 2009

ஊசிமரக்காட்டில்
ஊடுருவிப்பாய்ந்த
மின்னல்குழவி
அதை
முத்தமென்று சொன்னது.
பூமியின் சிலிர்ப்பில்
பொறியொன்று கிளம்பி
பொசுக்கி மாய்த்தது
பொதுவாய் அங்கே.
தழல் தகு நடனம்
ததிகிட ததிகிடவென
வெம்மை பரப்பி
அழித்து, ஒழித்து
ஆடிக்களைத்து
அடுத்த மழைக்கு
சிலிர்த்து நிற்கிறது
மண்ணில் கிடந்த
விதையொன்று கிளம்பி.
அழிக்க அழிக்க
ஆக்கத்தின் சுவடு
அழிப்பின் பின்னோடு….

Creation in the midst of destruction

the lightening
thought
it was a kiss
so wild it was
the entire forest
was on fire!
the weak and
sessile
the meak and
immovable
perished
instantaneously.
then came the
next rain.
the pine cone
emerged out of its shell
with little leaves
and stem
and thanked
the sky

Advertisements