மூடிவைத்த முண்டாசுக்குள்?

September 28, 2009

மோகத்தைக் கொன்று விடு!
என்று முண்டாசு சொன்னதிலிருந்து
தேடிக்கொண்டு இருக்கிறேன்.
அது உன் கண்களில் இருக்கிறது
என்று நண்பன் சொன்னான்.
கண்ணை மூடி அலைந்து பார்த்தேன்.
நாளமில்லாச் சுரப்பிக்குள்தான்
என்று அடித்துச் சொன்னார் மருத்துவர்.
எல்லாம் அடிப்படை வேதிமச் சேர்க்கை
காதல் கலவை கேட்டதில்லையா?
என்றான் மருந்துக்கடை பாபு.
மோகம் உன்னிடமுமில்லை
என்னிடமுமில்லை
அது பெண்ணிடம் உள்ளது
என்றார் உள்ளூர் சந்நியாசி.
அவன் கிடக்கான் அசடு!
பழத்திலே சுவையை
வைத்தவன் எவன்?
என்றாள் பாட்டி.
ஆகக் கொடுத்தவனிடமே
வைத்துக்கொள் என்று
திரும்பக்கொடுக்க
ஊசிப்போன சுண்டக்கடலை
இல்லையே அது!
எங்கே அந்த மோகம்?
இல்லை!
அந்த முண்டாசு!

Advertisements

நான் இருக்கிறேன்.

September 13, 2009

நான் இருக்கிறேன்.

ஆதியில் ஒரு சேதி இருந்தது.
அச்சேதி
தன்னைப்
பல்வேறு
ஊடகங்கள் வழியே பரிமளிக்கச் செய்தது.
உயிர்கள் மலர்ந்தன
இப்பூவுலகு முழுவதும் அச்சேதியே.
பர மண்டலங்களிலும் அதுவே.
மிக்கதோர் திறனில்
நுண்ணணுத்திரியில்
ரகசியத்தின் ரகசியமாய்
கருவுக்குள் கருவாய்
மூடிவைத்து
ஏழு கடல், ஏழு தீவு தாண்டி
சிந்துபாத் கதையாய்
அன்றிலிருந்து இன்றுவரை
ஒரே சேதிதான்.
எங்கு நோக்கினும் அச்சேதிதான்.
கொல்லைப்புற புடலையில்,
பின்னிப்படரும் பூசணியில்…
ஆம். நேற்று பூசணிதான் காட்டிக்கொடுத்தது!
பாரிப்படர்ந்து, பச்சை இலையுள் மூடி மறைத்து
பாதுகாத்த ரகசியத்தை நேற்று
பட்டவெளியில், பட்டுப் போன இலைகளின் ஊடே
பூசணிக்காய் நிற்கிறது.
ஒரு கர்ப்பக்கிரகம்
ஒரே சேதிதான்.
நான் இருக்கிறேன்.

In the beginning was a message

In the beginning was a message
This message spread everywhere
in the blast of a super nova
in the fine dust of a star
in the birth of a planet
in every organism that evolved.
like in holy grail this message was
guarded with utmost secrecy
deep within a body
deep within a cell
deep within nucleus
deep within DNA
Strangely enough!
this secret revealed itself
in an autumn pumpkin
who knew where the pumpkin was
when it was fertilized
which flower bear that seed.
But the Autumn revealed the secret.
All the leaves have fallen
the guarded leaves,
the guarded twain
everything weathered.
there stands the huge pumpkin
the Sanctum Sanctorum!
I am here!


நான் அவனில்லை

September 12, 2009

நான் அவனில்லை

திடீரென்றோர் சம்சயம்.
பள்ளிப் பாலர் புகைப்படம்
பார்த்த போது நான் தான் அது
என்று நம்ப முடியவில்லை!.
நானே அது என்னும் பிணைப்பு
இருக்கட்டும் பின்னால்.
17க்கு மீண்டும் போனால்
இனிக்குமா? கசக்குமா?
பட்டுப்பூச்சியை ஒடுக்கி, மடக்கி
கூட்டுப்புழுவாக்கும் அவஸ்தைதான்.
நினைத்தாலே பயம் வருகிறது.
ஆக, அவையெல்லாம் நானில்லை, ஏதோ!
இந்த நினைவு. பாடாய் படுத்தும் நினைவு!
இது எந்த நானிலிருந்து வருகிறது?
நினைவு முன்பு இருந்து அதில மனிதர்கள்
வந்து போகின்றனரா? இல்லை,
மனிதர்கள்தான் நினைவுக்கேந்திரமா?
அந்தப்படத்தில் ஒல்லியாய்
அரை வயிறும் கால் வயிறுமாய்
இருக்கும் அது நானே இல்லை.

I’m not that!

Don’t tell that photo is me?
You mean that malnourished
thin, lean person is me?
When was it taken?
When I was 17?
Certainly I don’t want to be
an adolescent again.
Like packing back a butterfly
to its cocoon!
No, I’ve no relationship to this
person.
I don’t even remember
what he/she remembered then?
Where does this memory emerge from?
From the caterpiller, cocoon or the butterfly?
Like beads in a thread?
thread being the memory.
Does it mean that a formless memory
gives meaning to the physical?
connecting, moving, expressing,
to form more memories,
all within thin air?
Am I the memory
or something else?
a form or no form?
Certainly I am not that.


மூன்றாம் பிறை

September 12, 2009

மூன்றாம் பிறை

போடா பயித்தியம் என்பாள்
காதலி முன்பெல்லாம்!
‘அவ கிடக்கா பயித்தியம்!’
என்கிறாள் மாமியார் இப்போது.
காதல் பயித்தியம்
என்றது ஊர் அப்போது.
கணக்குப் பயித்தியம்
சினிமா பயித்தியம்
கோயில் பயித்தியம்
என்ற பலவகையுண்டு.
பார்ப்பதைக் காணாமல்
பொய் உரு நிறுத்தி
மெய்யெனக் காணும்
எல்லாம் பயித்தியம்
என்பான் குள்ளச்சாமி.
நரம்பினில் பாய்கின்ற
மின்னணு தடம் மாறிப்
புறப்பட்டால் பயித்தியம்
என்பது ரயில்வே சிப்பந்தி
சொன்ன கணக்கு.
செய்வதெல்லாம் கவிதை
என்பதோர் பயித்தியம்.
வளர்பிறையில் மூன்றா?
தேய்பிறையில் பன்னிரண்டா?
பயித்தியம்?

It’s crazy

You smiled at me when I said I’m crazy for you!
The whole school gossiped that we’re mad at each other.
My mother things that you are crazy anyway 😉
There are people who are crazy about
physics. maths, cinema, religion and what not?
It is indeed crazy that most relationships are
icon to icon instead of people to people.
or shall I say between opinion to opinion?
Neurologist say that when somebody is crosswired
then he/she is crazy!
When the brain is not fully grown
like a crescent of a moon.
I wonder which one to choose
the thin crescent or
a waning crescent ?
It’s crazy anyway!


நான் அது இல்லை

September 12, 2009

நான் அது இல்லை!

அது தலையில் யாரோ
மண்ணெண்ணையைக்
கொட்டி விட்டார்கள்.
நாற்றம் வந்து, தேடிப்பார்த்தல்
உடலெல்லாம் பிசுக்காய்
அலைந்து கொண்டு இருக்கிறது.
ஆம், அது ஆழ்கடல் இல்லை
அலைகடல் கூட இல்லை.
அமைதியான ஒதுக்குப்புறக் கடல்.
தினம் பார்க்கிறேன்.
ஒருநாள் போல் ஒரு நாள்
இருப்பதில்லை.
ஒரு நாள் ஒரே குப்பை
கரையெல்லாம்.
அடுத்த நாள் ஒரே சிவப்பு,
ஏதோ பிராணியின் செம்முட்டைகள்.
அடுத்த நாள் பாசி படிந்த பச்சை.
இன்னொரு நாள்
ஸ்படிகம் போல் தெளிவு.

கடலே!உன்னைத் தொட்டபோது
என் ஆதிமூலத்தை
உணர்ந்தேன்.
நானும் நீயும் ஒன்றுதான்.
நான்தான் மறந்துவிட்டேன்.
தினம், தினம், ஏதேதோ
குப்பைகள். அள்ளி வாரிக்
கொட்டிக் கொண்டே
அரைநூற்றாண்டு
கடந்து விட்டேன்.

உன்னோடு நடக்கும் போது
ஊடு பாயும் தெளிவு
வருகிறது. அதுவும்
கணப்பொழுதுதான்.
நீயும், நானும்
நிரந்த கதியில்
மாறிக்கொண்டே
இருக்கிறோம்.
என்னை அழுக்கென்று
பழிக்கவோ!
அற்புதம் என்று போற்றவோ
யாரும் வேண்டாம்.
ஏனெனில்
சொல்லும் அப்பொழுதிலேயே
நான் அது இல்லை!

Sea Me!

It’s a quite bay
surrounded by mountains.
Quite but not really quite.
Not static I mean
It is quite dynamic!
A strong stench drove me to the beach
Oil spill!
It added a sheene
a rainbow to the waters.
Hardly a day passby
without marine debris
on its shores.
One day it is green
bloom of algae
another day, red!
red bloom? or eggs?
it’s dirty one day,
crystal clear the
next day.

Only this summer
I plunched in to it’s waters.
You know what?
Me and You are the same.
Well, or are you my roots?
whatever,
we’re dynamic
ever changing
in moods, seasons,
waves and colors.
Nobody can say that we’re dirty
nor they declare that we’re holy
as and when the word is uttered
We’re changed forever!


வாடிக்கை மறந்ததும் ஏனோ?

September 12, 2009

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

நானா இப்படி பேசுகிறேன்
என்று புருவம் உயர்த்தி
சிரிப்பாய். தெரியும்.
சேர்ந்து மகிழ்ந்திருந்து
மீண்டும் சந்திபோமென
விட்டுச் சென்ற இடம்
இதுதான்.
என்னைக் கட்டி
அணைத்து
முத்தம் சொரிந்து
தயக்கத்துடன்தான்
சொன்னாய்,
மீண்டும் இன்னொருமுறை
சந்திப்போமா? என்று.
அன்றிருந்த மோகத்தில்
ஆறுமாதம் கூடுதல் என்றேன்.
என்ன உன் கணக்கு?
ஆறு யுகமா?
இத்தனை காலமா?
நானா?
கனவிலும், நனவிலும்
கோடி காட்டிச் சென்றாலும்
உன்னை மறந்தேதான் போனேன்,
என்று எண்ணியிருக்கும் போது
மிருதுவான ஒரு வேளையில்
என் உள்ளத்தை மீண்டும் நீ
கொள்ளை கொண்டாய்!
நாம் சந்தித்து மகிழ்ந்த
பவளமல்லிக் கொல்லை கூட
மண் பெயர்ந்து போய்விட்டது.
ஆனால் மண்வாசனை?
அது போகுமோ?

வந்து நிற்கிறேன்.
இப்போது உன் தவணை.

காசுமி

Freedom?

I know
You won’t believe me.
Yes, I am looking for you,
again,
after,
how long?
eons?
may be!
You said
let’s meet after six months
here, the same spot.
with overflowing passion and love
I said, six months?
I could not bear that
long separation.
but look!
eons have passed.
why did you give me
unconditional freedom?
I wandered in life
like an unguided child
in Internet.
so many lives…
until this tender moment
when I regained my passion
for you.
Here I’m.
It’s your turn now.