இளைப்பாறும் போது / Recess

November 18, 2009

வயிற்றில் சுமக்கும் சிசுவுடன்
வயக்காட்டில் வேலை செய்யும்
குடியானவள் பாவம்தான்.
ஈன்று தொப்புள் கொடி அறுபடும்
முன்னரே, ஓடத்தயாராக இருக்கும்
வனப்பசுவின் கன்றுக்கு ஆறுதல்
யார் சொல்வது?
இயங்கு!
என்பதுதான் ஆணை!
எதிர்ப்பேச்சு கேட்கமுடியாமல்
சுழன்று கொண்டிருக்கும்
மானுட வாழ்வு அலுப்புத்தருகிறது.
இறந்து பட்டுப்போனாலும்
பேயாய் அலையும் கவலை.
இயங்கா இருக்கும் நிலையில்
இந்திரன் இமையாமல் இருப்பான்
எனினும் சலனமுறும் மனது
குறித்து ஆயிரம் கதைகள் அங்கு.
இயக்கமற்ற போதென்று ஏதேனும்
இருந்தால் சொல்லுங்கள்
கொஞ்சம் இளைப்பாற.

Recess

Feel sorry for the poor pesant woman
who needs to work in the field in
full pregnancy.
A wild beast in African savanna
fully pregnant and ready to deliver
a calf in open with hungry mouths
all around.
‘Run’ ! That is the command
that everyone should obey
from the time of creation.
Move, act, keep moving
unquestionably, all the time.
Even at rest ‘something’ has to move
to keep you alive!
Aren’t you tired?
Want a rest?
well..what is rest, after all?
move..keep moving
unquestionably…

Advertisements