அழியாத கோலங்கள்

May 24, 2012

உறவுகளை முறையாய் அறிந்து கொள்ளுமுன்,
ஆனா, ஆவன்னான்னு அரிச்சுவடி எடுக்கும் முன்,
அவளுடன் உறவுகொண்டன கதைகள்.
அவை மனிதக்கதை என்று மட்டுமில்லை.
கதை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்தாள்.
மழலை மாறும் முன் கதைகள் சொல்லத்தொடங்கினாள்.
இவள் கதை பக்கத்துவீட்டுப் பாட்டிக்குக்கூடப்பிடித்தது.
கக்கூஸ் நேரத்தில் சுவரில் விண்டுவிழும்
சில்லுகளுடன் கதைத்தாள்.
பள்ளியில் தோழிகளுடன், கல்லூரியில் காதலுடன்,
கதை, கதை..என்பதே அவள் எங்கும் கண்டது.
பிரபஞ்சத்தில் அழிக்க முடியாதது கதை என்று
சொன்ன அவளுக்கு நோபல் பரிசு கூட கிடைத்தது!

Stories never die.

Tell me are there no stories?
Asks she.
She started telling stories
before she even knew the alphabets.
Stories of people are one sort
but animal stories, atomic stories
cosmic stories and robot stories
and that sort
Everybody has a story to tell
the novelist, the scientist,
the physician and the psychiatrist.
When she revealed that not only
matter can neither be created nor destroyed
but also the stories.
She won the nobel prize!

Advertisements

அக(தி) நோக்கு

May 22, 2012

இலண்டன் குகையிரத
முகத்துவாரத்தில்
அவன் வந்து நின்றது
ஒரு கோடைகாலம்!
புற்றுக்குள்ளிருந்து வீசியது
தென்றல் என்றான்!
நான்காறு மாதங்கள் கழிந்தபின்
உள்ளும் புறமும் உருண்டோடும்
பனிக்காற்று முகத்திலடித்து
புண்படுத்தி விரட்ட முயல்வதாய்
உணர்ந்தான்.
ஆனாலும் நின்றிருந்தான் வீம்பாய்
அகதியாகும் ஒரே நோக்குடன்.

Refugee

It was summer
when he landed in London
The wind that blew through the Tube
caressed him gently,
Months later, the restless, hissing wind from the snake-hole
bit him hard
Stubbornly, he stood hoping, praying to be
a refugee.