இனிமையாய் இரு!

April 3, 2014

ஆண் ஆணாகவும்
பெண் பெண்ணாகவும்
இருக்கும் பொழுதுகள்
இனிமையானவை
ஒரே சர்க்கரைப்பாகு
அக்காரடிசலில் இனிப்பதற்கும்
அதிரசத்தில் இனிப்பதற்கும்
வேறுபாடுள்ளது
ஆன்மா ஒன்றெனினும்
உடற்சேர்க்கை
ருசியை மாற்றும் போலும்.
நீ அழகானவள் என்று தெரியும்
அந்த நாணப்புன்னகை
முக்காடிட்டு முகத்தை
மறைத்தது
என்னமோதான் செய்தது.
இது காதல் இல்லை.
நீ பெண்
நான் ஆண்
எனும் பேதம்
உருவாக்கிய இனிமை.
நீ பெண்ணாக இருப்பதுதான்
எவ்வளவு இனிமை
ஒரு ஆணுக்கு!

Advertisements